← முகப்பு

பெண் உளவாளியுடன் தொடர்பிலிருந்த CEO?

உலகளவில் செயற்கை நுண்ணறிவு, கணினி கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் முன்னணியில் திகழும், 'என்விடியா' (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியுடன் தொடர்பில் இருந்ததாக வெளியான செய்திகள் என்விடியா நிறுவனத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பெண் உளவாளியுடன் தொடர்பிலிருந்த CEO?

என்விடியா நிறுவனம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜென்சன் ஹுவாங், கிரிஸ் மாலக்கோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரிம் ஆகியோரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா கிளாரா நகரில் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் கணினி விளையாட்டுப் பிரியர்களுக்கான கிராபிக்ஸ் பிராசஸர்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தியது. இன்றளவும் வீடியோ கேமிங் துறையில் 'GeForce' சீரிஸ் கிராபிக்ஸ் கார்டுகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகிற்கு தேவையான பிரதான சக்தி என்விடியா தயாரிக்கும் அதிநவீன சிப்புகள் தான். சாட்ஜிபிடி போன்ற உலகளாவிய AI ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் கணினித் தேவைகளுக்கு என்விடியாவின் சிப்புகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதனால் உலகெங்கிலும் இந்நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங், சீனப் பெண் உளவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அது தேசிய பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தனது குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட அவமானத்திற்காக, தன் மனைவி மற்றும் ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஜென்சன் ஹுவாங்.

இதற்கிடையே, என்விடியா நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான கிம்பர்லி பவல் என்பவருடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியது. என்விடியா நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு கடந்த மார்ச் மாதம் சான் ஜோஸ் நகரில் நடைபெற்றது. அப்போது, ஜென்சன் ஹுவாங் மற்றும் கிம்பர்லி பவுவல் ஆகியோர் ஒரு ஹோட்டலில் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் பதிவாகியுள்ளதாக என்விடியா நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்ததை அறிந்த ஹுவாங்கின் பாதுகாப்புப் பணியாளர்கள், உடனடியாக அந்த நபரைத் தனிமைப்படுத்தி விசாரணை நடத்தியதாகவும், பின்னர் அவரிடம் ரகசிய காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.நிறுவனத்தின் நன்னடத்தை விதிகளுக்கு மாறான இந்த விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின

நிறுவனத்தின் நற்பெயர், பங்குதாரர்களின் நலன் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, ஜென்சன் ஹுவாங்கை சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்குவது குறித்து என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவும் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.

தலைமை அதிகாரியைச் சுற்றியுள்ள இந்தத் தொடர் சர்ச்சைகள் மற்றும் விசாரணைகளால், உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளன.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.