← முகப்பு

ஏலியன்கள் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது! – ட்ரம்ப் சொன்ன தகவல்!

சதிக்கோட்பாடுகளில் பிரபலமான பூமிகளில் ஏலியன்கள் வாழ்கின்றனவா என்பது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் பேசியது வைரலாகியுள்ளது.

Donald Trump

காலம்காலமாக வேற்றுக்கிரக ஜீவராசிகள் குறித்து மனிதர்கள் இடையே பல்வேறு கற்பனைகள் நிலவி வருகின்றன. பலரும் வானத்தில் ஏலியன்கள் செல்லும் பறக்கும் தட்டை பார்த்ததாக கதை விடுவது அமெரிக்காவில் அன்றாடம் நடக்கும் செயல்களில் ஒன்று. அதேசமயம் பூமியைப் போல வேறு உயிரினங்கள் வாழும் கிரகங்கள் உள்ளனவா என்பது குறித்தும் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்டபோது அவரிடம் ஏலியன்கள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பேசிய அவர் "எனக்குத் தெரிந்த சதிக்கோட்பாடுகளை நம்பாத சிறப்பான விமானிகள் உள்ளனர். அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருமுறை அவர்கள் எஃப்-22 போர் விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது வேகமாகச் செல்லும் ஒரு பறக்கும் தட்டை வானில் கண்டதாகச் சொன்னார்கள். போர் விமானங்களில் அதிவேகமானது எஃப்-22, அதைவிட வேகமாக அந்தப் பறக்கும் தட்டு சென்றதாக அவர்கள் சொன்னார்கள்" என கூறியுள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

தொடர்ந்து அவரிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள் "அமெரிக்க அதிபரான உங்களுக்கே தெரியாமல் ஏலியன்கள் பற்றி ரகசிய ஆராய்ச்சி நடப்பதாகச் சொல்லப்படுகிறதே?" என கேட்க, அதற்கு பதிலளித்த ட்ரம்ப் "அப்படி ரகசிய ஆராய்ச்சி நடப்பதாக நான் எதுவும் கேள்விப்படவில்லை. அப்படி ஏதாவது ஒருவேளை நடந்துகொண்டிருந்தால் நான் உடனே விசாரித்துக் கண்டுபிடித்துவிடுவேன்" என பேசியுள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.