காஞ்சிபுரம் அருகே வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சி – தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மீரான் என்ற இளைஞர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் துணைக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், இன்று வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மீரானை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மீரானை வெட்டிவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீரானை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய 5 மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
போலீசார், இந்தத் தாக்குதல் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 5 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.


