← முகப்புகாஞ்சிபுரம் →

காஞ்சி அருகே பசு மாடுகளுக்கு விஷம் வைத்த கொடூரன்!

திருப்பெரும்புதூர் அருகே வெள்ளரை கிராமத்தில், 20 பசு மாடுகளுக்கு பூச்சிமருந்து வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அக்கிராமத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சி அருகே பசு மாடுகளுக்கு விஷம் வைத்த கொடூரன்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளரை கிராமம் உள்ளது. இங்குள்ள கிராமமக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் உள்ளி்ட்ட கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் வளர்க்கும் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிகளில் விடுவது வழக்கம். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் திரும்பி வராததால் கிராம மக்கள் தேடி சென்ற போது 20க்கும் மேற்பட்ட மாடுகளின் கண் மற்றும் காது பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் விவசாய நிலங்களில் இறந்துகிடந்தன. இதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தண்ணா என்கிற பழனி என்பவர் தனது விவசாய நிலத்தில் மாடுகள் மேய்வதால் ஆத்திரமடைந்து 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கு பூச்சி மருந்து வைத்து கொன்றதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பழனியிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 20 மாடுகளை மருந்து வைத்து கொன்ற சம்பவம் திருப்பெரும்புதூர் சுற்றுவட்டார விவசாயிகள், கிராம மக்கள், விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !