← முகப்புகாஞ்சிபுரம் →

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

இன்று நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திகுளம், ஏரிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வண்ணமயமான புத்தாடைகள் அணிந்தும், விதவிதமான மாறுவேடங்களில் தோன்றியும் விழாவை களைகட்டச் செய்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் தலா 2 கிலோ கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !