← முகப்புநாகப்பட்டினம் →

அடித்து துன்புறுத்திய மகன்கள்! கலெக்டரிடம் வந்து அழுத 83 வயது மூதாட்டி!

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி பிரேமாவதி. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் ருத்திராபதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு செந்தில்குமார், உதயக்குமார் என்ற இரண்டு மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டி

இந்நிலையில், தனது இரண்டு மகன்களும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக மூதாட்டி பிரேமாவதி குற்றம் சாட்டியுள்ளார். மகன்களுக்குத் தேவையான பணம் மற்றும் பொருளுதவிகளைத் தன்னால் இயன்ற அளவிற்கு வழங்கியதாகவும், தனது வீட்டை மகள் மீனாட்சி பெயருக்கு மாற்றியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன்கள் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பிரேமாவதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

தனது வீட்டை மீட்டுத் தருவதுடன், மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

83 வயதில் பெற்ற மகன்களிடமே பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் தஞ்சமடைந்துள்ள மூதாட்டியின் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !