புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 470 வது சந்தன கூடு ஊர்வலம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மறு நாள் 20ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் ஆய்வு செய்தார். அப்போது தர்காவில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் நகராட்சி அதிகாரியிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. சந்தன கூடு வரும் பாதை, யாத்ரீகர்கள் வந்த செல்லும் பாதை ஆகிய அனைத்து பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொது மக்களுக்கு தேவையான சுகாதாரம் மருத்துவம் வாகன நிற்கும் இடம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருச்செந்தூரில் அரோகரா கோஷம் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹார விழாவில் முருகனுக்கு நிகராக முதல்வரை கருதி கோஷம் போட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனம் எழுவது இயல்புதான். ஆனால் கடவுளுக்கு நிகராக எந்த ஒரு தனி மனிதனும் ஆகிவிட முடியாது. ஆர்வம் காரணமாக சிலர் கோஷமிட்டு இருந்தாலும் கடவுளை அவமதிக்கும் கோஷமாக கருதி விட கூடாது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் தென் மேற்கு பருவ மழையின் போது மேட்டூர் அணை நிரம்பி இருக்க வேண்டும். சூப்பர் எல்நினோ காரணமாக பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பவில்லை. இதனால் காலதாமதமாக அணை திறக்கப்பட்டது. முதல்வரிடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடக்கோரி ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கர்நாடக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இல்லையெனில் மாற்று வழிகளை தமிழக அரசு ஏற்படுத்தும் என்று பேசினார்.
Buy Now ! Pay Daily !


