← முகப்புநாகப்பட்டினம் →

நாகையில் நடைபெற்ற இளையோர் கலைத் திருவிழா!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மை 'பாரத் விக்சித் பாரத் 2047' இளையோர் கலைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது; மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளையோர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

நாகையில் நடைபெற்ற இளையோர் கலைத் திருவிழா!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மை பாரத் சார்பில் விக்சித் பாரத் இளையவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் நீலப் புரட்சியில் பொருளாதாரம் மேம்பாடு அடைவது, இளைய தலைமுறைகளை கொண்டு மனிதவள மேம்பாட்டு சக்திகளை உருவாக்குதல், வருங்கால இந்தியாவை கட்டமைப்பதில் இளையோர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இளையோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள இளையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற இளையோர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் மை பாரத் சார்பில் வழங்கப்பட்டது இதற்கான விழா நாகை ஏடிஎம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நிகழ்ச்சியில் ஏடிஎம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை பிரபாவதி வரவேற்று பேசினார். நாகை மாவட்ட மை பாரத் அமைப்பின் இளையோர் நல அலுவலர் அர்ஷா ராஜ் தலைமை தாங்கி பேசினார். நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் தங்க மோகன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பாரத பிரதமரின் கனவு திட்டமான 2047 இல் இந்தியா வல்லரசாக விளங்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இளையவர்களுக்கான பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவை தேசப்பற்றினையும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் வகையில் காணப்படுகிறது. மாணவர்கள் தங்கள் இளமை பருவத்தில் திட்டமிடுதலில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற்றமான சிந்தனைகளை பெறுவதற்கு இத்தகைய விக்சித் பாரத் அமைப்புகள் உதவியாக இருந்து வருகிறது என்று பேசினார்.

விழாவில் நாகை மாவட்டஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சதீஷ் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியினை பேராசிரியை சாவித்திரி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !