← முகப்புநாகப்பட்டினம் →

நாகையில் அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்பு!

வேதாரண்யம் அருகே உள்ள செம்பியமணக்குடியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு

மீட்கப்பட்ட இடத்தில் பதாகை வைக்கப்பட்டது

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்பியமணக்குடி அருள்மிகு லட்சுமி நாராயணர் பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் செம்பியமணக்குடி வருவாய் கிராமத்தில் உள்ளன. தனியார் வசம் உள்ள இந்த நிலங்களை நீதிமன்ற உத்தரவுகளின்படி இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் உத்தரவின்படி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராஜா இளம்பெரும்வழுதி ஆலய நிலங்கள் வட்டாட்சியர் ஜெயபாலன், வேதாரண்யம் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் நில அளவியர்கள் நேரில் சென்று குறிப்பிட்ட சர்வே எண்களில் அடங்கிய 11 ஏக்கர் 88 சென்ட் விலை நிலங்களை கையகப்படுத்தினர். இந்த நிலங்களின் மொத்த மதிப்பு 83,14,330 ரூபாய் ஆகும். மேலும் இந்த நிலங்களில் அத்துமீறி யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பிளக்ஸ் ஃபோர்டுகள் வைக்கப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !