← முகப்புசென்னை →

முரசு புயல் எதிரொலி: வட தமிழகத்தில் கனமழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது

முரசு புயல் எதிரொலி: வட தமிழகத்தில் கனமழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது. இந்தப் புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

முரசு புயலின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்தாலும், வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை, பலத்த காற்று மற்றும் மிகுந்த கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேவேளையில், எச்சரிக்கையுடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

கடலில் 4 முதல் 6 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழ வாய்ப்புள்ளது. இதனால் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே, வரும் 4-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக–புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான மீன்பிடிப் பணிகளையும் முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்.

கடல் அலைகளின் உயரம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடலோரச் சாலைகளில் கடல்நீர் தெறித்து வரக்கூடும். எனவே, பொதுமக்கள் கடற்கரை நடைபாதைகள் மற்றும் கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடைவெளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.