← முகப்பு

வங்கக்கடலில்உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம் எச்சரிக்கை!

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான முன்னறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில்உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம் எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 13 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற வாய்ப்புள்ளது. மேலும், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல் நவம்பர் 15 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், வெப்பநிலை சற்று உயரக்கூடும். எனினும், இயல்பான நிலையிலேயே வெப்பநிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.