← முகப்பு

இனி மலேசியா செல்வதற்கு விசா கட்டாயம்!

2027 ஜனவரி 1 முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவுச் சலுகையை மலேசியா அரசு வாபஸ் பெறுகிறது. மலேசிய குடிவரவுத் துறை நவம்பர் 17, 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் பயணம் செய்வதற்கு முன்பே செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனி மலேசியா செல்வதற்கு விசா கட்டாயம்!

விசா இல்லா சலுகையின் பின்னணியும் மாற்றமும்

சுற்றுலா மற்றும் வணிகப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் டிசம்பர் 2023 முதல் இந்தியக் குடிமக்களுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் தங்கும் சலுகை வழங்கப்பட்டது. 2024 டிசம்பரில் இந்தச் சலுகை டிசம்பர் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அந்தச் சலுகை டிசம்பர் 31, 2026-உடன் முடிவுக்கு வருகிறது. மலேசிய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப நுழைவு விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் குடிவரவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. கவனிக்க வேண்டிய முக்கிய தேதிகள் மற்றும் விதிமுறைகள்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

  1. டிசம்பர் 31, 2026 வரை தற்போதைய விசா இல்லா சலுகை தொடரும். அதிகபட்சம் 30 நாட்கள் தங்க அனுமதி.
  2. டிசம்பர் 1, 2026 முதல் ஆன்லைன் விசா விண்ணப்பங்கள் தொடக்கம்.
  3. ஜனவரி 1, 2027 முதல் விசா இல்லா நுழைவு ரத்து. வருகைக்கு முன்பே செல்லுபடியாகும் விசா வைத்திருக்க வேண்டும்.
  4. விண்ணப்ப காலாவதி விதி 7 வேலை நாட்களில் காலாவதியாகும். "New Application" அல்லது "Pending Payment" நிலையில் இருந்தால் தானாக ரத்தாகும்.
  5. விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படாது. அனுமதிக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் அல்லது பயணம் மாறினாலும் பணம் வராது.

சமீபத்திய பிற கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்தியர்களுக்கான விசா சலுகை ரத்து மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக மலேசிய குடிவரவுத் துறை தொடர்ச்சியான விதிமுறை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

  • விண்ணப்பத்தைத் தொடங்கிய பிறகு 7 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்கவோ கட்டணம் செலுத்தவோ தவறினால், அது தானாகவே காலாவதியாகிவிடும். மீண்டும் விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய படிவத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விசா விண்ணப்பக் கட்டணம் எந்தச் சூழ்நிலையிலும் திரும்ப அளிக்கப்படாது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது பயணத் திட்டத்தை மாற்றினாலோ கட்டணம் வராது.
  • செப்டம்பர் 1, 2026 முதல் Multiple Entry Visa வசதி அனைத்து நாடுகளுக்கும் இன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட 31 நாடுகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட பயண நோக்கங்களுக்காகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • நவம்பர் 16, 2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில், மலேசியாவில் தங்கும் முழுக் காலத்திற்கும் பயண மருத்துவக் காப்பீடு எடுக்குமாறு குடிவரவுத் துறை வலியுறுத்தியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கான முழுச் செலவையும் பயணிகளே ஏற்க வேண்டும் என்றும், விசா விண்ணப்பத்துடன் துணை ஆவணமாக MyTripPass போன்ற காப்பீட்டுச் சான்றிதழ் இணைப்பது பரிந்துரைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் எப்படித் தயாராக வேண்டும்?

  • டிசம்பர் 31, 2026-க்குள் மலேசியாவுக்குள் நுழைபவர்கள் தற்போதைய விசா இல்லா சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் (30 நாட்கள் வரை). வருகைக்கு 3 நாட்களுக்குள் ஆன்லைனில் மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) பூர்த்தி செய்வதுடன், குறைந்தது 6 மாத காலாவதி உள்ள பாஸ்போர்ட், நாடு திரும்பும் விமான டிக்கெட், தங்குமிட விவரம் மற்றும் பயணச் செலவுக்கான ஆதாரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். (டிசம்பரில் நுழைந்து ஜனவரியில் வெளியேறுபவர்களுக்கு அந்த நுழைவுக்கு விசா தேவையில்லை என்றாலும், ஜனவரியில் மீண்டும் புதிதாக மலேசியாவுக்குள் நுழைந்தால் விசா கட்டாயம்.)
  • டிசம்பர் 1, 2026 முதல் மலேசியாவின் அதிகாரப்பூர்வ MyVISA இணையதளம் (malaysiavisa.imi.gov.my) வழியாக முன்கூட்டியே eVISA-வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். போலியான இணையதளங்களைத் தவிர்த்து, விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் புகைப்படத் தகுதிகளைச் சரியாகச் சரிபார்த்து ஒரே முயற்சியில் துல்லியமாகச் சமர்ப்பிப்பது தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க உதவும்.
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !