← முகப்பு

வரிச்சலுகை கொடுத்தோமே.. வேலைவாய்ப்பு குடுத்தீங்களா? – கார்ப்பரேட்டுகளை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

இன்று டெல்லியில் FICCI-ன் வருடாந்திர கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகை கொடுத்தோமே.. வேலைவாய்ப்பு குடுத்தீங்களா? – கார்ப்பரேட்டுகளை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) அமைப்பில் 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1927ம் ஆண்டில் தொடங்கப்பட்ட FICCI அமைப்பு அடுத்த ஆண்டில் தனது 100வது ஆண்டைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில் இன்று FICCI-ன் வருடாந்திர மாநாடு தொடங்கியது. இந்த அமர்வில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல், ஏஐ தொடர்பான பயன்பாட்டுக் கொள்கைகளை வகுத்தல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சவால்கள் என பல்வேறு தலைப்புகளில் பல அமைச்சர்கள், நிதி ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் கலந்துக் கொண்டு பேசுகின்றனர். ’இந்தியா-2047’ என்ற தலைப்புடன் தொடங்கிய இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர் ”கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு பல சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கியுள்ளது. பெருநிறுவன வரி 30 சதவீதமாக இருந்த நிலையில் அதை 22 சதவீதமாகக் குறைத்தோம். புதிய வரி விதிப்பின் கீழ் தனிதபர் ரூ.12 லட்சத்திற்கும் உட்பட்ட வருமானத்திற்கு வரிக்கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு இவ்வளவு செய்த போதிலும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு அதிகரித்துள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாக பேசிய அவர் ”நீங்கள் எப்போதுமே அதிகமாக கேட்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதிக ஊழியர்களை பணியமர்த்தினீர்களா? அவர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா?” என கேள்வி எழுப்பினார். அரசின் சலுகைகள், திட்டங்களை பயன்படுத்தி நிறுவனங்கள் வளர்வது மட்டுமல்லாது அந்த நிறுவனத்தை சார்ந்துள்ள ஊழியர்களும் அந்த வளர்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

கார்ப்பரேட் நிறுவனத்தினர் கலந்துக் கொண்டிருந்த மாநாட்டிலேயே பிரதமர் மோடி, பெரும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை என பேசியிருப்பது அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளதாகவே கருதப்படுகிறது. ஆண்டு தோறும் பட்ஜெட் தாக்கலில் பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு வருமானவரி, நிறுவனங்களுக்கான வரிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது அரசியல் வட்டாரத்திலும், கார்ப்பரேட் வட்டாரத்தில் பேசுப் பொருளாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !