← முகப்புமயிலாடுதுறை →

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல்!

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்திருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்! - பெ.சண்முகம்  வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 2 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தமான நத்தம் குடியிருப்பு நிலம் என சீர்காழி கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தில் குடியேறியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம் கூறியதாவது, "தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட மடங்கள் பல நூறு ஏக்கர் அரசு நிலங்களை எவ்வித ஆவணமுமின்றி ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு வரவேற்கத்தக்கது என்றும், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

வைத்தீஸ்வரன் கோயிலின் மையப்பகுதியில் உள்ள சுமார் 2 ஏக்கர் அரசு நிலத்தைத் தருமபுரம் ஆதீனம் பல்லாண்டு காலமாக அனுபவித்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டிற்குப் பிறகு, இது அரசுக்குச் சொந்தமான நத்தம் நிலம் எனச் சீர்காழி கோட்டாட்சியர் உறுதி செய்துள்ளார். சொந்த வீட்டுமனை இல்லாமல் இந்த இடத்தில் குடியேறியுள்ள மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிலத்தை அளந்து பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், மாநிலத்தில் பெரிய கலவரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், அன்றாடம் நடைபெறும் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்" என்றார்.

காவிரி விவகாரத்தில், வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 15 டி.எம்.சி நிலுவைத் தண்ணீரைப் பெற்றுத் தர மத்திய அரசுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்து கட்சியின் அடுத்த மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !