← முகப்புமயிலாடுதுறை →

உடைந்து கிடந்த கழிப்பறை! பார்வையிட்ட அமைச்சர் அதிருப்தி!

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்து சங்கரன்பந்தல், உளுத்துகுப்பை ஆகிய இரண்டு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

உடைந்து கிடந்த கழிப்பறை! பார்வையிட்ட அமைச்சர் அதிருப்தி!

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்த சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது, அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார்.

அரசு மருத்துவமனையின் கட்டிடத்தில் 5-வது தளத்தில் உள்ள பெண்கள் மருத்துவ சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு மற்றும் கழிவறைப் பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குழாய் இணைப்புகள் மிகவும் தரமற்றதாகவும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருப்பதையும், கழிவறை சுத்தம் செய்யாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது குறித்து அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கழிவறையில் புதிதாகப் பொருத்தப்பட்ட பொருட்கள் பழுதடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுப்பணித்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து, கட்டிடப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மூலம் தரமான பொருட்களை உடனடியாக மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் டைல்ஸ் கற்கள் தரமற்ற முறையில் போடப்பட்டு இருந்ததையும் சுட்டிக்காட்டி அமைச்சர் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் மற்றும் நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாவட்டத்திலுள்ள சங்கரன்பந்தல் மற்றும் உளுத்துகுப்பை ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரங்களை அணிவித்து பெற்றோரிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை ரீதியான ஆய்வு கூட்டம் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மருத்துவத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் இயக்குனர் உமா, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாநிலம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1695 செவிலியர் பணியிடங்களில், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 101 புதிய செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, மாவட்ட நல சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதயநோய், நரம்பியல் நிபுணர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார். மேலும், தமிழக நிதிநிலை அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் 41 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2022-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ளது இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விடுபட்ட அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !