← முகப்புஅரியலூர் →

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிப்பு முயற்சி!

காவல்துறையினர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிப்பு முயற்சி!

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ். மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது கணவர் இறந்து 16 ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த மாதம் 15ஆம் தேதி ராஜி கடைத்தெருவுக்குச் சென்றபோது, அங்கு சிலர் தன்னைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் குவாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஆனால், புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகார் அளித்த தங்களையே மிரட்டுவதாகவும் ராஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர், தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பெண்ணின் புகார் மற்றும் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !