← முகப்புஅரியலூர் →

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சிறை நிரப்பும் போராட்டம்!– வீரபாண்டியன் அறிவிப்பு!

அரசு மற்றும் நாடு சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் தமிழக முதல்வர் வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சிறை நிரப்பும் போராட்டம்!– வீரபாண்டியன் அறிவிப்பு!

அரியலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது பேசிய அவர்,அப்போது அவர் கூறுகையில், கட்சி சார்ந்த பிரச்சினைகளில்கூட வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டனம் தெரிவிப்பதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டு மக்களின் அரசு அதிகாரத்தின் அடையாளமாக முதலமைச்சர் இருப்பதால், கண் முன்னே நிகழும் அநீதிகளுக்கு எதிராக அவர் குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும், அவர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதுடன் உரிய சட்டப் பாதுகாப்புகளையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், கொலைக் குற்றங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் அரசு மற்றும் காவல்துறை முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதனை தொடந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வீரபாண்டியன், இப்போராட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

இறுதியாக, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !