← முகப்பு

கடலோர மாவட்டங்களை குறி வைக்கும் கனமழை! – இன்றைய மழை வாய்ப்பு!

தமிழகம் முதல் ஆந்திரா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையால் இன்று கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களை குறி வைக்கும் கனமழை! – இன்றைய மழை வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் அவ்வப்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதும், அவை புயலாக வலுவடைவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் நல்ல மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, சுமார் 0.9 கி மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 0.9 கி மீ உயரத்தில் தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இன்று கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !