இந்த மாதம் தொடக்கத்தில் விலை ஏறியிருந்த தங்கம், தீபாவளிக்கு முன்னதாக தொடர் ஏற்றத்தை சந்தித்து வந்தது. ஆனால் தீபாவளிக்கு பிந்தைய நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
தங்கம் விலை சரிவு:
Buy Now ! Pay Daily !
நேற்று முன்தினம் அதிரடியாக விலைக் குறைந்த தங்கம் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600ம் குறைந்து, கிராம் ரூ.12,815-க்கும், சவரன் ரூ.1,02,520க்கும் விற்பனையாகி வந்தது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், சவரன் ரூ.960 விலை குறைந்து ரூ.1,01,560க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை:
அதை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூ.80 சரிந்து கிராம் ரூ.12,615க்கும், சவரன் ரூ.640 சரிந்து ரூ.1,00,920க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் சவரனுக்கு ரூ.5,120 விலை சரிவை சந்தித்துள்ளது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






