← முகப்பு

இரண்டு நாட்களாக சரியும் தங்கம் விலை! மக்கள் நிம்மதி!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் ஆபரண தங்கம் நேற்று முதலாக தொடர்ந்து விலை குறைந்து வருவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு நாட்களாக சரியும் தங்கம் விலை! மக்கள் நிம்மதி!

சர்வதேச பொருளாதார காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று உயர்ந்து வந்தது. தீபாவளிக்கு முன்பு விலை அதிகரித்த தங்கம், பண்டிகைக்கு பிறகு விலைச் சரிவை சந்தித்து வருகிறது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 விலை குறைந்து கிராம் ரூ.13,015-க்கும், சவரன் ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815க்கும், ஒரு சவரன் ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ.200க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.