← முகப்பு

நான் கலெக்டரிடம் தப்பா பேசினேனா? மறுக்கும் தவெக எம்எல்ஏ!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

நான் கலெக்டரிடம் தப்பா பேசினேனா? மறுக்கும் தவெக எம்எல்ஏ!

தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது சமீப நாட்களாக பல்வேறு வகையான புகார்கள், சர்ச்சைகள் அடிக்கடி எழுந்து வரும் நிலையில், தற்போது அவ்வாறாக பேசுப்பொருளாகியிருப்பவர் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ்.

அருள்விக்னேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரிடம் தவறான செய்கையுடன் நடந்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் பெண் எம்.பி ஜோதிமணியே கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தது, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பிற்கு உள்ளாக்கியது. அதை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இந்த விவகாரம் குறித்து பேசிய தவெக அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் எந்தவித சமரசமும் இன்றி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என தற்போது தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

தான் அரசு அதிகாரிகளை மிகவும் மதிப்பவன் என்றும், கண்ணியக்குறைவான எந்த செயலையும் தான் செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், தன் மீது எந்த வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை பலர் பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.