← முகப்பு

எம்.எல்.ஏக்கள் மீது குவியும் புகார்கள்! பனையூருக்கு வரச் சொன்ன முதல்வர் விஜய்! – அடுத்து என்ன?

தவெக எம்.எல்.ஏக்கள் மீது அடுத்தடுத்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில் இன்று பனையூரில் தவெக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தை முதல்வர் விஜய் ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் அமைந்து நேற்றுடன் (நவ.10) 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல் சமீபமாக தவெக எம்.எல்.ஏக்கள் மீது குவியும் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

துறையூர் எம்.எல்.ஏவும், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவி சங்கர், கோரிக்கை அளிக்க வந்த நபர் ஒருவரை தாக்கியதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள்விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இந்த விவகாரம் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு சென்ற நிலையில் இன்று தவெக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து தவெக எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகள் குழுவினரால் விசாரிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தை முதல்வர் விஜய்யே தலைமை ஏற்று நடத்துவதால் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல்களை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.