← முகப்புதஞ்சாவூர் →

காதலிப்பதாக கூறி 15 வயது மாணவியுடன் பழக்கம்! டிரைவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது பள்ளி மாணவியிடம் காதல் எனக் கூறி பழகி வந்த 28 வயது டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலிப்பதாக கூறி 15 வயது மாணவியுடன் பழக்கம்!  டிரைவர் போக்சோவில் கைது

இந்தப் பழக்கம் குறித்த விவரம் மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழலில், மாணவி விஷம் உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழையாறை பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரின் மகன் ராஜேஷ் (28). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் ராஜேஷ் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் தொடர்பான விவரங்கள் மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மாணவி வீட்டில் இருந்த கரையான் மருந்தை உட்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவியுடன் ராஜேஷ் பழகி வந்த விவகாரம் மற்றும் மாணவி விஷம் உட்கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

கும்பகோணத்தில் பள்ளி மாணவி விஷம் உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !