திருநெல்வேலிஅம்மா இருந்தா எவனும் வால் ஆட்ட முடியாது! ஜெயகுமார் பரபரப்பு பேட்டி
அன்று விஜய்யைப் பார்த்து ரீல்ஸ் மூலம் ஓட்டு போட்டார்கள், அது தற்காலிகமாக எடுபட்டது. இனிமேல் விஜய்யைப் பார்த்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். அவருக்கு ஓட்டு போட்ட குடும்பங்கள் இன்று விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் பாதிக்கப்பட்டு அச்சத்துடன் வாழ்கின்றன. பாதிப்பு வரும்போது மக்கள் சிந்திப்பார்கள் விரைவில் இந்த ஆட்சிக்கு மூடுவிழா நடத்தும் சூழல் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நெல்லையில் தெரிவித்துள்ளார்.