சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், வனப்பகுதியை ஒட்டிய பள்ளத்தில் சிறுமியின் உடல் கிடப்பதாக இன்று காலை ஏற்காடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் புதர்களுக்குள் கிடந்த 15 வயது சிறுமியின் உடலை மீட்டனர். சுமார் 30 அடி பள்ளத்தில் உடல் வீசப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Buy Now ! Pay Daily !
இதற்கிடையே, உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டு பள்ளத்தில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அதிவிரைவுப் படையினருடன் வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்தச் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் பிரேதப் பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
