← முகப்புதிருப்பத்தூர் →

வாணியம்பாடியில் நூற்றாண்டைக் கடந்தும் மறையாத சோகம்!

1903-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வாணியம்பாடியில் நடைபெற்றது.

வாணியம்பாடியில் நூற்றாண்டைக் கடந்தும் மறையாத சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், 1903-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நவம்பர் 12-ஆம் தேதி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1903-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் நந்தி மலை மற்றும் கோலார் மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் பேத்தமங்கலம் அணை, ராமசாகர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம் பாலாற்றில் கலந்து வாணியம்பாடி நகருக்குள் புகுந்தது.

இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த வெள்ளத்தின் நீர்மட்ட உயரத்தை நினைவுகூரும் வகையில், வாணியம்பாடி கச்சேரி சாலையில் 1903-ஆம் ஆண்டு ஐந்து அடி உயர அளவுத்தூண் நிறுவப்பட்டது. இதற்கு 2010-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 12-ஆம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அந்த வகையில், இந்த ஆண்டு பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் சமூக ஆர்வலர் வடிவேல் சுப்ரமணியம் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, நகர மன்ற உறுப்பினர் சாரதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், '1903 பாலாறு பெருவெள்ளம்' என்ற 292 பக்கப் புத்தகமும் வெளியிடப்பட்டது.

முன்னதாக, பாலாறு மற்றும் நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வலியுறுத்தி, 250-க்கும் மேற்பட்ட அமைப்பினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, சி.எல். சாலை, வாரச் சந்தை மைதானம் வழியாகச் சென்று நினைவுத் தூணை அடைந்தது. அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !