← முகப்புதிருவண்ணாமலை →

பரணி தீபத்தன்று இதை மறந்துவிடாதீர்கள்... வீட்டில் விளக்கேற்றும் முறை!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பரணி தீபத்தன்று இதை மறந்துவிடாதீர்கள்... வீட்டில் விளக்கேற்றும் முறை!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர், அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாகக் காட்டப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இந்த தீபம் ஏற்றப்படுவதால், இது 'பரணி தீபம்' என அழைக்கப்படுகிறது.

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று, வீடுகள் முழுவதும் மாலையில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இறைவன் சன்னிதியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதன்படி, வீட்டு வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் ஐந்து தீபங்களும் ஏற்றலாம். பூஜை அறையில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களையும் வட்ட வடிவில் வைத்து, அனைத்து திசைகளிலும் ஒளி பரவும் வகையில் ஏற்ற வேண்டும். இந்த விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பரணி தீபத்தன்று வீட்டில் முறைப்படி விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்தில் நன்மை பெருகவும், முன்னோர்களின் ஆசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக, நெய் தீபம் ஏற்றி இறைவனை மனமுருகி வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு பரணி தீபத்தன்று வீடுகளிலும் விளக்கேற்றி, இறைவனை வழிபட்டு திருக்கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !