இந்தச் சாலையைப் பயன்படுத்தி தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பள்ளி மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், வடக்கு ஒத்தத்தெரு பகுதியில் சுமார் 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
Buy Now ! Pay Daily !
அதேபோல், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்புபவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எரியாத தெருவிளக்குகளைச் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
