← முகப்புபெரம்பலூர் →

பெரம்பலூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – இருவர் கைது!

பெரம்பலூர் மாவட்டம், எசனை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 132 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7,400 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – இருவர் கைது!

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் எசனை டாஸ்மாக் பார் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அப்போது, அரசின் அனுமதியின்றி மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்த எசனை காந்திநகரைச் சேர்ந்த மகேந்திரன் (53), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நல்லதம்பி (62) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 11 பீர் பாட்டில்கள், 102 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்கள், 3 சீமான் பிராந்தி பாட்டில்கள், 16 1848 பிராந்தி பாட்டில்கள் என மொத்தம் 132 மதுபாட்டில்களும், விற்பனைப் பணம் ரூ.7,400-ம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !