தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டு தோறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப் போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் இன்று (14.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ப.அப்துல் ராசிக் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 15 கி.மீதூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குமேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் நடத்தப்பட்ட இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் சாலை வழியாக திருச்சி –சென்னை பைபாஸ் ரோடு சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடையும் வகையில் நடத்தப்பட்டது. மிதிவண்டி போட்டியில் சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். அதில் வெற்றி பெற்ற 60 வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- ம் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ம், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.250/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர், க.கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் மு.அனிதா மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Buy Now ! Pay Daily !

