← முகப்புதிருவள்ளூர் →

வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்! போன் பேசும் டாக்டர்கள்! - திருவள்ளூரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மருத்துவமனையில் மருந்து வழங்கும் இடத்தில் தனியார் பயிற்சி மாணவர்கள் மருந்து வழங்குவதால் மாத்திரைகள் மருந்துகள் மாற்றி வழங்குவதால் நோயாளிகள் உயிரோடு மருத்துவமனை நிர்வாகம் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்! போன் பேசும் டாக்டர்கள்! - திருவள்ளூரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் புறநோயாளிகளாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பல்வேறு உடல் உபாதைகளுக்காக இந்த மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை அடிப்படையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் பகுதியில், ஒரே கவுண்டர் மட்டுமே இருப்பதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் தனியார் பயிற்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மருந்து மாத்திரைகள் வழங்குவதால் நோயாளிகள் உயிரோடு மருத்துவமனை நிர்வாகம் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த மருத்துவமனையில் மருந்து வழங்குனர்கள் பற்றாக்குறையா? அல்லது ஏன் தனியார் பயிற்சி மாணவர்களை வைத்து பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது? இதில் விபரீதம் ஏற்படும் முன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளாக சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவர்களுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டு வரிசையில் காத்திருந்து மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல மணி நேரம் செல்போனில் பேசிக்கொண்டு போதிய சிகிச்சை அளிப்பதில்லை. நோயாளி சொல்வதை அவர் காதில் கூட வாங்குவதில்லை. செல்போன் பேசுவதிலேயே மருத்துவர்கள் தங்கள் நேரத்தை பணி நேரத்தில் செலவிடுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !