மதுரை மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா, வரும் நவம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்தப் புத்தகத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், கலை மற்றும் இலக்கியம் தொடர்பான சிறப்பு அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. மேலும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
Buy Now ! Pay Daily !
குறிப்பாக பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழாவைப் பார்வையிடலாம். மேலும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இவ்விழாவில் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் திரளாகப் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

