இவ்விழாவை முன்னிட்டு, குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளில் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளைப் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொது நூலகத் துறை அலுவலர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
செல்லூர் கிளை நூலகத்தின் ஆண்டு விழா - நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ கல்லாணை!
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மற்றும் மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் செல்லூர் கிளை நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், 65-ஆம் ஆண்டு நீலக்கல் விழா – 2026 இன்று (நவம்பர் 14) சிறப்பாக நடைபெற்றது.

