← முகப்புகிருஷ்ணகிரி →

தமிழகத்திற்கு தொடர்ந்து கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு 22 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கைதான இருவர் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பார்ப்போம்.

தமிழகத்திற்கு தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் கோவை பகுதியைச் சேர்ந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் கடந்த 10.10.2026 அன்று போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து மூலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு சுமார் 22 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்றதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பாபு மற்றும் குனியமுத்தூரைச் சேர்ந்த ஷபீக் அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், இருவரும் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !