மார்க்கெட்டை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓசூரில் வியாபாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈசன் முருகசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் சிப்காட், விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் விவசாயிகளுக்கென ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். நான்கு மாவட்ட விவசாயிகளுக்காக கட்டப்பட்ட மலர்கள் ஏல மையம் பயன்பாடின்றி இருப்பதாகக் கூறிய அவர், அதனைச் சுற்றியுள்ள அரசு நிலத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளுக்கான ஒருங்கிணைந்த அரசு மார்க்கெட் அமைக்க வேண்டும் என்றார். அரசு மார்க்கெட் அமைக்கும் வரை பத்தலப்பள்ளி மார்க்கெட்டை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், அதனை மீறி அகற்ற நடவடிக்கை எடுத்தால் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசு ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு சார்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளார்.

