தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதர் கோயில் தெருவில் உள்ள குடிநீர்த் தொட்டி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடிநீர்த் தொட்டியில் பாசி படர்ந்திருப்பதுடன், பூச்சிகள் மற்றும் பல்வேறு அசுத்தங்களும் மிதப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அன்றாடத் தேவைக்கான குடிநீர் தொட்டி இத்தனை ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குடிநீர்த் தொட்டியை உடனடியாகச் சுத்தம் செய்து, கிருமிநாசினி மூலம் முறையாகச் சுத்திகரித்த பின்னர் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

