தருமபுரி செந்தில் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்புவதற்காக வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தின் பின்புற டிக்கி பகுதியில் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைக் கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வாகனத்தின் டிக்கிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை வெளியே எடுக்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பாம்பைப் பத்திரமாகப் பிடித்து மீட்டனர். பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தின் டிக்கிக்குள் நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் செந்தில் நகர் பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Buy Now ! Pay Daily !

