தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி வயது 44. இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற போது சுயநினைவின்றி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கிடந்தவரை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த போது பூங்கொடி மூளைச்சாவடைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பூங்கொடியின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் பூங்கொடியின் உடல் உறுப்புகளான கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகளை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க முன் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று பூங்கொடியின் உடல் உறுப்புகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பூங்கொடியின் உடலுக்கு மலர் தூவி மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
Buy Now ! Pay Daily !

