← முகப்புவிழுப்புரம் →

சாலையை தடுத்த பட்டாதாரர்! - 100 விவசாய குடும்பங்கள் பாதிப்பு

பட்டாதாரர் சாலையை தடுத்ததால் சென்று, வர வழியின்றி சிரமப்படும் 100 விவசாயக் குடும்பங்கள்.

சாலையை தடுத்த பட்டாதாரர்! - 100 விவசாய குடும்பங்கள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியம் கிராமத்தில், சுமார் 100 விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து மருதன் தாங்கள் ஏரி வரை உள்ள வயல்வெளிச்சாலையை (2007-2008)வாக்கில் அப்போதிருந்த பஞ்சாயத்து தலைவரால் பட்டாதாரர்கள் 10 பேரின் ஒப்புதல் உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 20லட்சம் அரசு செலவில் சிமெண்ட் சாலை, அமைத்து இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டில் வந்துள்ளது.

10 பேரில் ஒருவரான கார்வண்ணன் இறந்து விட்டதால் அவரின் 8 வாரிசுகளில் விஜயகுமார் தவிர்த்து 7பேர் வழியை மரித்து அராஜக செயலில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக (சட்டப் புலிகள் கட்சி தலைவர்), திரு.சே.சத்தியராஜ்,(ச.பு.க பொதுச் செயலாளர்) திரு.வீரமணி, வே.ரவிக்குமார்(தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர்), செல்வராஜ், வீராசாமி, நீலமேகம், செந்தில்குமார், ஆகியோர் தலைமை யில், ஊர் பொதுமக்கள் திரண்டு விழுப்புரம் மாவட்ட, ஆட்சியரை சந்தித்து, மனு அளித்தனர்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !