← முகப்புதிருப்பூர் →

ரீல்ஸில் பேசுவது அரசியல் அல்ல..அண்ணாமலை விமர்சனம்!

திருப்பூர் அலகுமலையில் நடைபெற்ற வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் சந்திப்பில் பேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை, ரீல்ஸ் அரசியலை விமர்சித்ததுடன், மக்களோடு இணைந்து செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறத் திறமையான நபர்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரீல்ஸில் பேசுவது அரசியல் அல்ல..அண்ணாமலை விமர்சனம்!

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் கடந்த மாதம் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அலகுமலையில் உள்ள தனியார் அரங்கில் தன்னார்வலர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொங்கலூர் கிராமப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த மாரத்தான் போட்டியைத் தனிநபர் முன்னிலையின்றி, குழுவாக இணைந்து நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், 1960-களில் திருப்பூரில் நிதி வசூலித்தபோது, அதைப் பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நேரில் வந்ததாக திமுக நிர்வாகி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கம் பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் என்றும், அந்தக் கொள்கையை ஏற்கிறோமோ இல்லையோ, அதன் வளர்ச்சியில் பேச்சுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிவித்தார். தற்போது சினிமா நடிகர்கள் ரீல்ஸில் பேசுவதாகவும், அது ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இல்லை என்றும் விமர்சித்தார்.

அரசியலில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது தங்களது செயல்கள் அனைத்தும் சரி என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மற்றவர்களின் செயல்கள் தவறு என்றும் வாதிடுவது ஆக்கப்பூர்வமான அரசியல் அல்ல எனக் குறிப்பிட்டார்.

மக்களோடு மக்களாகப் பயணித்து, மக்களுக்காகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் திறமையான நபர்களை உருவாக்குவதே அடுத்தகட்ட இலக்கு என்றும் தெரிவித்தார். மேலும், கிராமங்களில் வார இறுதி நாட்களில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகளைச் செல்போன் பயன்பாட்டிலிருந்து விலக்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை மனிதர்களாக மதித்து, சமூக மாற்றத்திற்காகத் தன்னார்வலர்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !