புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகரில் செயல்பட்டு வரும் ஆலங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருக்கும் செந்தில் குமார் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகவும், பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தி ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவரை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து பேரணியாக வந்து சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒழுக்கம் மற்றும் மரியாதையை கற்றுத் தரும் திருக்குறள்களையும், ஆத்திச்சூடி வரிகளையும் வைத்து அதை சத்தமாக சொல்லிக்காட்டி சார்பதிவாளருக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Buy Now ! Pay Daily !
ஒரு கட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து சார் பதிவாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அழைத்து விளக்கம் கொடுத்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

