திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தேன்மலை பகுதியைச் சேர்ந்த ராஜா (25) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு 30 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 5 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுதாகர் ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Buy Now ! Pay Daily !
இதையடுத்து, தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாகக் கூறிய ராஜா, கடந்த நவம்பர் 12-ஆம் தேதி மாலை நீதிமன்ற வளாகத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தப்பியோடிய ராஜாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ராஜாவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்திலிருந்தே குற்றவாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
