← முகப்புகன்னியாகுமரி →

நாகராஜர் கோவிலில் அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து, நாகர்கோவில் நாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

நாகராஜர் கோவிலில் அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். மாவட்டத்திற்கு வந்த அவர், முதலில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலுக்குச் சென்றார்.

அங்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடன் சென்ற அமைச்சர் ரமேஷ், நாகராஜரை வழிபட்டார். பின்னர் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தை வலம் வந்த அவர், முருகன் சன்னதியில் நடைபெற்ற கந்த சஷ்டி பூஜையிலும் கலந்து கொண்டார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனைத் தொடர்ந்து, கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தனது ஆய்வுகளை முடித்த பின்னர் பதிலளிப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !