தென் தமிழகத்தின் முக்கிய கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம், கேட்ட வரம் தரும் திருத்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
புனித சவேரியார் நேரடியாக வந்து தங்கியிருந்த காலத்தில் அவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து வழிபடுகின்றனர்.
Buy Now ! Pay Daily !
இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்று டிசம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு திருப்பலிகள், ஆடம்பர கூட்டுத் திருப்பலிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்ப் பவனி டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. இதனால் திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.