← முகப்புதஞ்சாவூர் →

மேகதாது அணை எதிர்ப்பு ரெயில் மறியல் வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. நீலமேகம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், அப்போதைய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் மேயரும், தற்போதைய மாநகர செயலாளருமான சண். ராமநாதன் உள்ளிட்டோர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேகதாது அணை எதிர்ப்பு ரெயில் மறியல் வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. நீலமேகம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை!

தஞ்சாவூர்: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டம் தொடர்பான வழக்கில், முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி தஞ்சாவூரில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்கங்கள், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்தப் போராட்டம் தொடர்பாக அப்போது தி.மு.க. மாநகர செயலாளராக இருந்தவரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், அப்போதைய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் மேயரும், தற்போதைய மாநகர செயலாளருமான சண். ராமநாதன் உள்ளிட்டோர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் மேயர் சண். ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வழக்கறிஞர் அமர்சிங் ஆகிய 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களது தரப்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், முன்னாள் அரசு குற்றப்பிரிவு வழக்கறிஞர் எஸ். சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் எஸ். ஜெயசந்திரன், மாநகர தி.மு.க. வழக்கறிஞர் அணித் தலைவர் ஆர். அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம். மணவழகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் மேயர் சண். ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வழக்கறிஞர் அமர்சிங் ஆகிய 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

28 வழக்குகளிலும் விடுதலை

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் ஏற்கனவே 27 வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று நடைபெற்ற 28-வது வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகளிலும் விடுதலைத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !