திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திஷா கமிட்டி தலைவர் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில், இணை குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பழங்களை கல் மற்றும் கெமிக்கல் கொண்டு பழுக்க வைத்து மக்களின் உடல்நலனை கெடுக்கக்கூடிய வகையில் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நான்கு ஐந்து வட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பலாபழத்திற்கு கூட கெமிக்கல் வைக்கின்றார்கள். கெமிக்கல் இல்லாமல் எந்த பழமும் கடைகளில் விற்கப்படுவதில்லை. இதுகுறித்து அதிகப்படியான புகார் மனுக்கள் வந்து கொண்டிருப்பதாகவும், ஒரு சில உணவகங்களில் சுகாதாரம் இல்லாத தரமற்ற முறைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. பாதுகாப்புத்துறை அதிகாரி குழு தலைவர் இணை தலைவர் மாவட்ட ஆட்சியரை உடனடியாக அணுக வேண்டும். அடுத்த கூட்டத்திற்குள் மக்களை பாதுகாக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை ஆய்விற்கு செல்லும் பொழுது உடன் அழைத்துச் செல்ல வேண்டும். மக்களின் நலம்தான் முக்கியம். அரசு அதிகாரிகளோடு நாங்களும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் மூன்றாம் நிலை அதிகாரிகளை மீட்டிங்கிற்கு அனுப்பி விட்டு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சரியாக வருவதில்லை. அனைத்து முதல் நிலை அதிகாரிகளும் வருகை புரிய வேண்டும் என, திஷா கமிட்டி மீட்டிங்கில் வேலு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசினார்.
Buy Now ! Pay Daily !
