← முகப்புஅரியலூர் →

விவசாயியாக மாறிய மாவட்ட ஆட்சியர்!

பனை மர விதைகள் நடும் விழாவில் கை தேர்ந்த விவசாயி போல நேர்த்தியாக மரக்கன்றுகளை நட்டு அசத்திய மாவட்ட ஆட்சியர்.

விவசாயியாக மாறிய மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்களில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

அரியலூர் அருகே உள்ள தவுத்தாய்குளம் பெரிய ஏரியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பனை விதைகள் நடும் பணியை, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தொடங்கி வைத்தார். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி கரைகளில் சுமார் 5000 பனை விதைகள் மற்றும் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதற்காக வருகை தந்த ஆட்சியர் மிருணாளினி, பனைவிதைகளை கையில் எடுத்து பார்த்ததும் சூடாக இருப்பதை கண்டு விதை மூட்டைகளை பிரித்து வைக்க அறிவுறுத்தினார். பின்னர் பனை விதைகளை தோண்டப்பட்டிருந்த குழியில் புதைக்க முற்பட்டபோது, அங்கிருந்த மண் கடினமாக இருந்ததைக் கண்டு மண் வெட்டி வாங்கி அதனை உடைத்து தூளாக்கி அந்த மண்ணை கைகளில் எடுத்து குழியை மூடியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் உடன் வருகை தந்திருந்த கோட்டாட்சியர் பிரமியின் கையில் இருந்த பனை விதையை பார்த்து, முளைவிடும் பருவத்தில் இருக்கும் விதையை நடவு செய்ய வேண்டும் என கூறி, வேறு பனை விதையை எடுத்து வருமாறு அறிவுறுத்தி அதனை கோட்டாட்சியரிடம் கொடுத்து எந்த நிலையில் பனை விதைகளை நடவேண்டும் எனவும் தேர்ந்த விவசாயி போல சொல்லினார்.

இதனையடுத்து மரக்கன்றுகளை நடுவதற்காக சென்ற ஆட்சியர் மரக்கன்றினை குழியில் வைத்ததுடன், காலில் அணிந்து இருந்த செருப்பை கழட்டி விட்டு வெறும் கால்களுடன், மணலை குழியில் தள்ளி அதன் மீது ஏறி நின்று மிதித்ததைக் கண்டு அனைவரும் ஆட்சியரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

ஆட்சியர் மிருணாளினி தோட்டக்கலைத் துறையில், முதுகலை பட்டம் முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !