கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அரசுத் துறைகள் நடத்தும் கூட்டங்களில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் உள்ளிட்ட மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வெளிமாவட்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
இதனால் இரு தரப்பு விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மூத்த விவசாயி அவமதிக்கப்பட்டதாகக் கூறி எழுந்த எதிர்ப்பால் கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இருக்கையில் அமரச் செய்தார். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.