← முகப்பு

ஊரை தாக்கும் கிடோரா! மீண்டும் வந்த காட்ஸில்லா – Godzilla Minus Zero Review

கடந்த பாகத்தில் காட்ஸில்லா முழுவதுமாகக் கொல்லப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு வரும் புதிய ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார்கள்?

ஊரை தாக்கும் கிடோரா! மீண்டும் வந்த காட்ஸில்லா – Godzilla Minus Zero Review

ஹாலிவுட் படங்களுக்கு உலகளவில் நிறைய ரசிகர்கள் உண்டு. முக்கியமாக டைனோசர், கிங்காங், காட்ஸில்லா என வித்தியாசமான ஜந்துக்களை கொண்டு ஹை பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் உலகம் முழுவதுமே கல்லாக் கட்டுகின்றன. அப்படியாகதான் கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் MonstersVerse என்ற பெயரில் காங், காட்ஸில்லா, கிங் கிடோரா, ரோந்த் என பல மான்ஸ்டர்களை வைத்து பல படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் ஹாலிவுட்டில் எப்போதுமே காட்ஸில்லாவை ஹீரோவாகதான் காட்டுவார்கள். ஆனால் காட்ஸில்லாவின் உண்மையான படைப்பாளிகளான ஜப்பானியர்கள் எப்போதுமே காட்ஸில்லாவை வில்லனாகதான் காட்டுவார்கள். அப்படியாக கடந்த 2023ல் காட்ஸில்லாவை வில்லனாக வைத்து எடுக்கப்பட்ட Godzilla Minus One திரைப்படம் உலகளவில் பெரும் ஹிட். அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஜப்பானிய திரை வண்ணத்தில் உருவாகியுள்ள படம்தான் Godzilla Minus Zero.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த படத்தின் கதை 1949ல் தொடங்குகிறது. அதாவது காட்ஸில்லாவை அழித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு. ஜப்பானில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்து விழுகிறது. அதிலிருந்து தோன்றும் மர்ம பொருள் காட்டு விலங்குகளை விழுங்கி அவற்றின் உருவத்தை கலந்த ஒரு உருவமாக மாறி கிடோரா என்ற டிராகனாக வளர்ந்து ஜப்பானை தாக்கி அழிக்கிறது. அந்த கிடோராவை அழிக்க பேரிடர் மேலாண்மை அதிகாரியான கெஞ்சி நோடா, முன்னாள் விமான தற்கொலைப்படை (கமிக்காசே) வீரரான ஷிக்கிஷிமாவின் உதவியை நாடுகிறார். ஷிக்கிஷிமா கடந்த பாகத்தில் காட்ஸில்லாவை கொல்வதற்கான விமானப்படையில் இருந்தவர். காட்ஸில்லா தாக்குதலில் பாதிக்கப்பட்ட நொரிகோ என்ற பெண்ணை மணந்து, அகிகோ என்ற அனாதை சிறுமியை தத்தெடுத்து வளர்க்கிறார்.

godzilla
godzilla

இப்போது கிடோராவை கொல்ல வேண்டிய படைக்கு இவர் மீண்டும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த ஆபரேஷனில் கிடோரா வெற்றிகரமாக வீழ்த்தப்படுகிறது. ஆனால் அது கால நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றமடையக் கூடியது என்பது அதன் பின்னர்தான் தெரிய வருகிறது. இதற்கிடையே காட்ஸில்லா, கிடோரா பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த டாக்டர் முராகாமி, கிடோராவை போல காட்ஸில்லாவும் வளர்சிதை மாற்றமடையக் கூடியது என்றும், அதன் அணுக்கதிர் உமிழ்வு கிடோராவை பாதிக்கக் கூடியது என்பதையும் கண்டறிகிறார்.

மனிதர்களால் கிடோராவை அழிக்க முடியாத நிலையில், காட்ஸில்லா எங்கோ உயிரோடு இருக்க வேண்டும். அதை கண்டுபிடித்தால் அதை வைத்து கிடோராவை அழிக்க முடியும் என நினைக்கின்றனர். அவர்கள் காட்ஸில்லாவை கண்டுபிடித்து எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்தினர் என்ற பரபரப்பான கதைதான் Godzilla Minus Zero.

godzilla
godzilla

இந்த காட்ஸில்லா மைனஸ் சிரிஸின் சிறப்பம்சமே, இது ஹாலிவுட் படங்களை போன்ற எக்கச்சக்க CG கம்யூட்டர் கிராபிக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி எடுக்கப்படாமல் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதுதான். படத்தில் கிடோரா, காட்ஸில்லா காட்சிகள் மனிதர்கள் வரும் காட்சிகளை விட குறைவுதான். ஆனாலும் கதை சுவாரஸ்யத்தை இழக்காமல் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்போடே கதையை நகர்த்தி செல்கின்றனர். பல இடங்களில் காட்ஸில்லா, கிடோராவின் பிரம்மாண்டத்தைக் காட்ட அவற்றை முழுவதுமாக காட்டாமல் கட்டடங்களை நொறுக்கிச் செல்லும் அவற்றின் கால்களை மட்டும் காட்டுவது போன்ற கேமரா ஆங்கிள்கள் அவற்றின் மீதான ஒரு த்ரில்லர் உணர்வை கடத்துகிறது.

திரைப்பட ஆக்கமாக ஹாலிவுட் காட்ஸில்லா படங்களை விட மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இது. மொத்த பட்ஜெட்டே 15 மில்லியன் டாலர்கள்தான் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை 100 மில்லியன் டாலர்களை தாண்டி வசூலித்து வருகிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் பிடிக்காது, ஆனால் பரபரப்பான ஒரு மான்ஸ்டர் வெர்ஸ் பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் படமாக இருக்கிறது Godzilla Minus Zero.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !