கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி சிவகங்கையில் சிஐடியு பெண்கள் ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Buy Now ! Pay Daily !
சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் உமாநாத், மாவட்டச் செயலாளர் சேதுராமன், பொருளாளர் அய்யம்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாக்கியமேரி கலந்துகொண்டு பேசினார். மேலும், நிர்வாகிகள் வேங்கையா, வீரையா, லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
